பறக்கும் துப்பாக்கி : அதிகாரிகள் விசாரணை!!(வீடியோ)

554

flying_gun

அமெரிக்க இளைஞர் ஒருவர் தயாரித்த “பறக்கும் துப்பாக்கி”(Flying Gun) வைரலாக பரவி வருகிறது. கடந்த யூலை 10 ஆம் திகதி பறக்கும் துப்பாக்கி என்று பெயரிடப்பட்டு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

14 நொடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், ஆளில்லா விமானத்தில் துப்பாக்கி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது, அந்த துப்பாக்கி இலக்கு இல்லாமல் 4 முறை சுடுகிறது.

தற்போது இந்த வீடியோ மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

அதில், அமெரிக்காவின் கிளிண்டனை சேர்ந்த மெக்கானிக் பொறியியலாளரான ஆஸ்டின் ஹேக்வுட் என்பவர் இதனை தயாரித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்துவோம் என விமான போக்குவரத்து துறை தனது அறிக்கையில் கூறி உள்ளது.

இந்நிலையில், அந்த மாணவனின் தந்தை எனது மகன் ஆளில்லா விமானத்தை தாயரிக்கவில்லை எனக்கூறி, விமானத்துறையின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.