கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவெலி ஆற்றிற்கு நீர் வழங்கும் பிளக்வோட்டர் தோட்ட கீழ் பிரிவில் உள்ள ஓடையிலிருந்து பெண் சிசுவின் சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதிக்கு சென்ற பிரதேசவாசிகள் சிலர் சிசுவின் சடலத்தை கண்டு கினிகத்தேனை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார். அதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் சிசுவை மீட்டுள்ளனர். தாய், சிசுவை பிரசவித்தவுடேனே இவ்வாறு ஓடையில் வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சிசுவின் சடலம் மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்தோடு சிசுவை பிரசவித்த தாயை கைது செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






