பாகிஸ்தானுக்கு எதிரான 20 க்கு இருபது இலங்கை குழாம் அறிவிப்பு!!

478

SL

பாகிஸ்தான் அணிக்கெதிராக இரு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

லசித் மலிங்க தலைமையிலான இந்த குழாமில் 5 புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, திரிமான்னே மற்றும் சந்திமால் ஆகியோரின் பெயர்கள் இக் குழாமில் இடம்பெறவில்லை.

சாமர ஹப்புகெதரவுக்கு மூன்று வருடங்களின் பின்னர் அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான இலங்கை குழாமில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பெயர் விபரங்கள் வருமாறு,

லசித் மலிங்க ( அணித் தலைவர்), திலகரட்ண டில்ஷான், குஷல் பெரேரா, கித்ருவன் விதானகே, தனஞ்சய டி சில்வா, அஞ்சலோ மத்திவ்ஸ், டசுன் சானக்க, சாமர ஹப்புகெதர, ஷிஹான் ஜயசூரிய, திஸர பெரேரா, ஜெப்ரி வென்டர்சே, நுவான் குலசேகர, பின்னுர பெர்னாண்டோ, சத்துரங்க டி சில்வா, மலிந்த சிறிவர்தன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேவேளை, பாகிஸ்தான் அணிக்கெதிரான இரு இருபதுக்கு 20 போடடிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச மைத்தானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.