கொலை குற்றவாளிகள் ஐவருக்கு மரண தண்டனை!!

550

கொலை குற்றவாளிகள் ஐவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2000ம் ஆண்டு லிந்துலை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் இந்த ஐவரும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

2000ஆம் ஆண்டிலிருந்து தொடா்ந்து நடத்திய விசாரணைகளின் பின்னரே இவ்வாறு தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்த கிறேட்வெஸ்டன் தோட்டத்தை சேர்ந்த சந்திரசேகரன் வேலுப்பிள்ளை, பெருமாள் லெட்சுமன், பெருமாள் மயில்வாகனம், பெருமாள் பாகர், ராஜேந்திரன் குணசேகரன் ஆகிய ஜந்து பேருக்கும் மரண தண்டனை வழங்கி தீர்பளிக்கப்பட்டது.

மேற்படி ஐந்து பேரும் லிந்துலை கிறேட்வெஸ்டன் தோட்டத்தில் உள்ள சுப்பையா மாரிமுத்து என்பவரை தனிப்பட்ட பிரச்சினை காரணமாக 2000ஆம் ஆண்டு 10 மாதம் 31ம் திகதி அடித்து கொலை கொலை செய்திருந்தனர்.

11 12