நாடாளுமன்றத்தில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய பெண் உறுப்பினர்!!

661

MP feed

ஆஜெண்டினா நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர் ஒருவர் தனது குழந்தைக்கு பாலூட்டிய புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.

ஆஜெண்டினா தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற உறுப்பினரான விக்டோரியா டொண்டா பெரிஸ் என்பவர், அங்கு வைத்து தனது குழந்தைக்கு பாலூட்டியுள்ளார்.

இவர் பாலூட்டிய புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது, பசியால் அழுத குழந்தைக்கு பாலூட்டுவது தவறில்லை, ஆனால் பார்க்கும்போது சுற்றியிருப்பவர்கள் சங்கடமான நிலைக்கு ஆளாவார்கள் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இதுகுறித்து ஜுவனா என்ற பெண்மணி தனது டுவிட்டரில், பெரும்பாலான தாய்மார்கள் தங்களது குழந்தைகளை பாலர் பாடசாலையில் விட்டு செல்கின்றனர், ஆனால் இவரின் செயல் பாராட்டக்கூடியது என்று கூறியுள்ளார்.

அதற்கு, ஜுசன்னே என்பவர், நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் குழந்தைக்கு பாலூட்டும்போது தனது மார்பகங்களை மறைத்திருக்கலாம், ஏனெனில் சுற்றியிருப்பவர்களின் பார்வை மார்பகங்களின் மேல் பட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.

கவர்ச்சிகரமான பெண் உறுப்பினர் என்ற பெயரும் இவருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.