மகிந்தவின் விரலை முறித்தவர் மன்னிப்பு கோரினார்!!

448

Mahinda

பொதுத்­தேர்தல் பிர­சா­ரத்தில் கலந்­து­கொள்­வ­தற்­காக ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, அக்­கு­ரஸ்ஸ நக­ரத்­துக்கு செவ்­வாய்க்­கி­ழமை சென்றார். அங்கு பழைய பஸ்­த­ரிப்­பி­டத்­தி­லேயே பிர­சாரக் கூட்­டத்­துக்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.

தேர்தல் பிர­சா­ரக்­கூட்டம் மாலை 4 மணி க்கு ஆரம்­ப­மா­னது. மஹிந்த ராஜபக் ஷ மாலை 5.30க்கு குறித்து இடத்துக்கு சென் றார். குண்­டுகள் துளைக்­காத பென்ஸ் காரில் சென்­றி­றங்­கிய அவர், குழுமி­யி­ருந்த மக்­க­ளுக்கு இடை­யி­லேயே மேடையை நோக்கி சென்றார்.

அந்த கூட்­டத்தில் இருந்த ஒருவர், தனது ஆர்வ மேலீட்­டால், ராஜபக் ஷவின் கையை பிடித்துள்ளார். அச்­சந்­தர்ப்­பத்தில் மஹிந்த ராஜபக் ஷ தன் கையை பிடித்­த­வரை நோக்கி தாக்க முயற்சித்துள்ளார். அவ்வாறு மஹிந்த, ராஜபக் ஷ தாக்க முயற்சித்த போதும் அவ­ருக்கு பாது­காப்பு வழங்­கி­க்கொண்­டி­ருந்த பாது­காப்பு தரப்­பைச்­சேர்ந்த மூவரும் தாக்­கு­தலை தடுத்துநிறுத்­து­வ­தற்­காக மஹிந்த ராஜபக் ஷவை பின்னால் ­தள்­ளி­விட்­டனர். அப்போது அவர் விழப் பார்த்தார். எனினும், மஹிந்­த­வுக்கு பின்னால் இருந்த பாது­காப்பு தரப்­பினர் மஹிந்­தவை பிடித்­து­விட்­டனர்.

அதன் பின்னர், ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் அக்­கு­ரஸ்ஸ வேட்­பாளர் மனோஜ் சிறிசேன, மஹிந்த ராஜபக் ஷவை மேடைக்கு அழைத்­துச் ­சென்றார். அந்த தேர்தல் பிர­சா­ரக் ­கூட்டத்தில் மஹிந்த ராஜபக் ஷ சுமார் 25 நிமி­டங்கள் உரை­யாற்­றினார். எனினும், இந்த சம்­பவம் தொடர்பில் எது­வுமே கூறவில்லை.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில், விளக்கமளித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,

‘அக்­கு­ர­ஸையில் எனது கைவி­ரலை பிடித்­தார் ஆத­ர­வுக்­கா­கத்தான். அவர் போதையில் இருந்­தாரோ தெரி­ய­வில்லை, ஆனால், நல்ல சுதந்­தி­ரக்­கட்சிக் காரர், வந்து என்­னு­டைய கைவி­ரலை பிடித்தார். பிடித்­த­மாதிரி என்­னு­டைய கைவிரல் கொஞ்சம் இருந்­தி­ருந்தால் உடைந்­தி­ருக்கும். நான் என்ன செய்ய தள்­ளி­விட்டேன். நான் தள்­ளி­விட்டு இருக்­கா­விடின் கைவிரல் உடைந்­தி­ருக்கும்’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கையைப் பிடித்து இழுத்ததாக கூறப்படும் அக்குரஸ்ஸவை வசிப்பிடமாகக் கொண்ட எஸ்.எஸ்.ஜி.சமிந்த என்பவர் மாத்தறையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் சம்பவம் தொடர்பாக விபரித்த போது, “கூட்டம் இடம்பெற்ற போது நான் கொஞ்சம் மதுபோதையில் இருந்தேன். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கண்டதும் நான் இருந்த இடத்தையே மறந்து விட்டேன்.

நான் அவருடைய கையைப் பிடித்து இழுத்தேன். பாதுகாப்புத் தரப்பினர் மற்றொரு பக்கம் இழுத்தனர். மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் பாரிய நெரிசல் ஏற்பட்டது. என்னால் ஏற்பட்ட சங்கடத்துக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோருகின்றேன் என்று குறிப்பிட்டார்.