27ம் திகதி முதல் படப்பிடிப்புகள் நிறுத்தம் : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!!

456

CINE

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கமான பெப்சியில் உறுப்பினராக உள்ள சினிமா தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பெப்சி மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், சம்பள உயர்வு தொடர்பாக சுமுக உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. எனவே, 27ம் திகதி முதல் படப்பிடிப்புகள் நிறுத்தப்படும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் பெப்சி உடன் நடக்கும் பேச்சில் முடிவு தெரியும் வரை படப்பிடிப்புகள் நடக்காது என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளது.

450 ரூபாய் ஊதியம் பெறும் ஊழியருக்கு 1000 ரூபாய் வழங்க வேண்டும் என வற்புறுத்துவதாக பெப்சி மீது தயாரிப்பாளர்கள் புகார் அளித்துள்ளனர். மேலும், தயாரிப்பாளரை மிரட்டி அதிக ஊதியத்துக்கு ஒப்பந்தம் செய்ய முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.