
தமிழ் சினிமா நாயகிகளில் கோயில் கட்டி கும்பிடும் அளவுக்கு ரசிகர்களை ஈர்த்தது என்றால் அது குஷ்பு தான்.
இவர் சினிமாவிலிருந்து தள்ளி இருந்தாலும், அரசியில் சார்ந்த விஷயங்களில் இருந்தாலும் சினிமா தாக்கம் இவருடன் எப்போதும் இருக்கும். சமீபத்தில் வெளிவந்த சல்மான் கான் நடிப்பில் பஜ்ரங்கி பைஜான் என்ற ஹிந்தி படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடைப்போட்டு வருகிறது.
இப்படத்தை பற்றி குஷ்பு நேற்று ட்விட்டர் தளத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். எனக்கு தெரியவில்லை எப்போது கடைசியாக இது போல் கதறி அழுதேன் என்று, என்னை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் கொட்டியது, மேலும் சல்மான் சிறந்த நடிகர் மட்டுமில்லாமல் சிறந்த மனிதர் என்று நிருபித்துள்ளார்.
என் அன்பு எப்போதும் உங்களை விட்டு நீங்காது, உங்கள் குடும்பம் நல்லா இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.





