10,000 ஓட்டங்களைப் பெற்ற 4வது இலங்கை வீரரானார் டில்ஷான்!!

497

Dlishan

இதுவரை ஒருநாள் போட்டிகளில் 10,000 ஓட்டங்களைக் கடந்த நான்காவது இலங்கை வீரர் என்ற பெருமையை இன்று திலஹரத்ன டில்ஷான் தனதாக்கியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியிலேயே அவர் இந்த சாதனையை எட்டியுள்ளார். இந்தப் போட்டியில் சற்று முன்னர் 62 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இவர் ஆட்டமிழந்து வௌியேறியுள்ளார்.

முன்னதாக சனத் ஜெயசூரிய, மஹெல ஜெயவர்த்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் இவ்வாறு 10,000 ஓட்டங்களைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.