சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய முயன்றவர் கைது!!

686

Abuse

திருகோணமலை – சமகிபுர பிரதேசத்தில் சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் போரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீன்பிடிக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவரே சமகிபுர பகுதிக்குச் சென்று சிறுமி வீட்டில் தனியாக இருந்த வேளையில் வல்லுறவுக்குட்படுத்த முயன்றதாகவும் குறித்த சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.