மட்டக்களப்பு வாவியில் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு!!

1195

batti

மட்டக்களப்பு வாவியினுள் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் இன்று நண்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சடலம் யாருடையது என்று அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்த மட்டக்களப்பு பொலிஸார், சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நீண்ட காலத்திற்குப் பின்னர் மட்டக்களப்பு நகர மத்தியிலுள்ள வாவியில் சடலம் மிதப்பது இதுவே முதற்தடவையாகும்.