பேஸ்புக் கணக்கு இல்லாமல் மெசஞ்சரை பயன்படுத்தலாம்!!

509

FB

பேஸ்புக் கணக்கு பதிவு இல்லாமலேயே கையடக்கத் தொலைப்பேசி எண்ணை கொண்டு பேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்த முடியும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக மெசஞ்சரை பயன்படுத்த முற்படும் போது, பேஸ்புக்கில் கணக்கு இல்லையா என்று விருப்பத்தேர்வு மூலம் கேட்கப்படும். எனவே இதன்மூலம் பேஸ்புக் கணக்கு இல்லாதவர்களால் மெசஞ்சரை பாவிக்க முடியாத நிலை காணப்பட்டது.

இந்நிலையில் பேஸ்புக் பாவனையாளர்களின் நலன் கருதி பேஸ்புக் கணக்கு பதிவு இல்லாமலேயே தொலைப்பேசி எண்ணை கொண்டு பேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்த முடியும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் மெசஞ்சரை திறக்கும் போது பெயர், தொலைபேசி இலக்கம் மற்றும் புகைப்படம் ஒன்றை தரவேற்றம் செய்து பயனர்கள் பாவிக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.