கொழும்பு பஸ் தரிப்பிடத்தில் பயணப் பையில் இருந்து சடலம் கண்டெடுப்பு!!

470

Body

கொழும்பு புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை அநுராதபுரம் பஸ் தரிப்பு இடத்தில் பயணப் பை ஒன்றினுள் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் தரிப்பு நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பயணப்பை ஒன்றை திறந்து பார்த்த வியாபாரி ஒருவர் அதில் சடலம் இருப்பதைக் கண்டதும் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.

குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.