வவுனியா கணேசபுரத்தில் அமைந்துள்ள எருசலேம் தேவாலயத்தில் (ERUSALEM CHURCH OF GOD ) நேற்றுமுன்தினம்(27.07.2015) போதகர் கிரியோனின் ஏற்பாட்டில் கொரியாவிலிருந்து வருகை தந்த வைத்தியர்குழுவினால் இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டது .
இலவச கண் மற்றும் பல் அவற்றுடன் உடலின் முழுமையான பகுதிகளும் பரிசோதிக்கப்பட்டதுடன் கண்ணாடியும் வழங்கப்பட்டது .
மருத்துவ முகாமில் 500 க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் சிங்கள மக்கள் கலந்து கொண்டு தங்களுக்குரிய சிகிச்சைகளை பெற்றிருந்தனர் .
மேற்படி மருத்துவ முகாமில் போதகர் கிரியோன் மற்றும் வவுனியாமாவட்டத்தில் அமைந்துள்ள திருச்சபைகளின் போதகர்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசினதும் கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களது சிரேஸ்ட அரசியல் ஆலோசகரும் கொழும்பு பல்கலைகழக பேராசிரியருமாகிய DR.அனீஸ் மற்றும் வடமாகாண ஏற்றுமதி விரிவாக்கல் இணைப்பாளரும் வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் தலைவருமாகிய ம. ஆனந்தராஜா மற்றும் அபிவிருத்திக்கான பட்டதாரிகள் மன்றத்தின் செட்டிகுளம் பிரதேச இணைப்பாளர் அன்ரன் ஸ்ரீதரன் பட்டதாரிகள் மன்ற பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு மேற்படி இலவசமருத்துவ முகாமினை ஆரம்பித்து வைத்தனர் .
வவுனியா நெற் செய்திகளுக்காக சரவணன்