நேற்றைய தினம் 28.07.2015 செவ்வாய்க்கிழமை வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டதிற்க்கான பட்டதாரிகள் மன்றம் மற்றும் வன்னி பட்டதாரி சங்க பிரதிநிதிகள் ஆகியோரை வவுனியாவில் அமைந்துள்ள பட்டதாரிகள் சங்க அலுவலகத்தில் சந்தித்தார் .
மேற்படி சந்திப்பில் சமகால அரசியல்நிலைமைகள் தொடர்பிலும் தேர்தல் நிலவரங்கள் மற்றும் வவுனியா மாவட்டத்தில் அபிவிருத்திக்கான பட்டதாரிகள் மன்றம் மற்றும் வன்னி பட்டதாரிகள் சங்கம் தமிழ் கிராமங்களில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்திகள் தொடர்பான விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது .
இக்கலந்துரையாடலில் இன்னும் ஓரிரு வாரங்களில் தமிழ் கிராமங்களில் 25 தையல் பயிற்சி நிலையங்ககளை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டதுக்கான பட்டதாரிகள் மன்றத்தின் மூலம் ஆரம்பிப்பதெனவும் மேற்படி 25 தையல் பயிற்சி நிலையங்கள் மூலம் 500 பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்கப்படும் எனவும் எதிர் காலத்தில் இன்னும் பல்வேறு விதமான அபிவிருத்திதிட்டங்களை ஆரம்பிக்க உள்ளதாகவும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் தெரிவித்தார்.
மேற்படி சந்திப்பில் வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கம் மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்துக்கான பட்டதாரிகள் மன்றத்தின் தலைவருமாகிய திரு.ம .ஆனந்தராஜா வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் உப தலைவரும் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்துக்கான செட்டிகுள பிரதேச இணைப்பாளருமான திரு. ரஜனிகாந்த் மற்றும் செட்டிக்குள பிரதேச கிராமிய அபிவிருத்தி இணைப்பாளர் அன்ரன் மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்துக்கான வவுனியா வடக்கு இணைப்பாளர்கள் திரு . துரைராஜா சிங்கம் ரஜீவன் பிரசாந்தன் , நடராஜா சிவராசன் மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்துக்கான வவுனியா நகரின் கிராம அபிவிருத்திக்கு பொறுப்பான திரு.சந்திர பிரகாஷ் திரு. பாலசிங்கம் பாலமுரளி மற்றும் பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர் .