கனடாவில் போலீசை கண்டித்து பெண்கள் நிர்வாண போராட்டம்!!

929

canadaday-storyகனடாவில் கிட்செனர் அருகேயுள்ள ஆண்டாரியோ நகரில், தமீரா, நாடியா மற்றும் அலிஷா முகமது ஆகிய 3 பெண்கள் மேலாடை அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்றனர். அதை தொடர்ந்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்.

பாதுகாப்பு காரணங்களை கருதி மேலாடை இன்றி செல்லக் கூடாது என கூறினார். அதற்கு பதில் அளித்த சகோதரிகள் கோடை காலத்தில் கடும் புழுக்கமாக இருப்பதால் மேலாடையை கழற்றிவிட்டு வாகனம் ஓட்டியதாக கூறினர்.

போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு கனடாவில் பெண்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆண்டாரியோ நகர் பகுதியில் பெண்கள் மேலாடையின்றி சுற்றித் திரியலாம் என கடந்த 1996–ம் ஆண்டில் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

எனவே, அப்பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தியது தவறு. மேலாடை இன்றி பெண்கள் சுற்றி திரிவது அவர்களது உரிமை, அதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் 100–க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் மேலாடை அணியாமல் அரை நிர்வாணமாக பங்கேற்றனர்.

முன்னதாக ஆண்டாரியோவில் உள்ள வாட்டார்லூ என்ற இடத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டனர். ‘‘நிர்வாணம் ‘செக்ஸ்’ அல்ல. பெண்களிடம் வெடி குண்டு இல்லை என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பெண்களின் இந்த வினோத போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.