அழகிய சவப்பெட்டி ரெடி: மரணத்திற்கு முன்பே பெண்ணின் விசித்திர முடிவு!!

626

coffin_ladyபிரித்தானியாவை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனக்கான சவப்பெட்டியை தயார் செய்து வைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த மேண்டி மெக்கொய்ர்(62) என்ற பெண்மணிக்கு குழந்தை என்று யாரும் இல்லை, தனது சகோதரனின் மகளுடன் வசித்து வரும் அவர், தனது இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை இப்போதே செய்து வைத்துள்ளார்.

அதாவது, தான் இறந்துபோனதற்கு பின்னர், தன்னால் யாரும் சிரமப்படக்கூடாது என்பதற்காக, பேப்பர் கழிவுகளை பயன்படுத்தி தனக்கு மிகவும் பிடித்தான விலங்கான பூனை உருவத்தில் சப்பெட்டி ஒன்றை செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, மரத்தினால் சவப்பெட்டி செய்யவேண்டுமென்றால் ஐந்து முதல் ஆறாயிரம் யூரோக்கள் தேவை, அவ்வாறு தயாரித்தாலும் அது ஒன்றிற்கும் பயன்படாமல் மண்ணுக்குள் புதைக்கப்பட்டு அழியத்தான் போகிறது.

எனவே, பேப்பர் கழிவுகளை பயன்படுத்தி சவப்பெட்டி செய்துள்ளேன், மேலும் சவப்பெட்டி அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது, தற்போது இதனை எனது வீட்டின் முன்புற தோட்டத்தில் வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
சவப்பெட்டியை செய்ய இவரது தோழி ஜீனா என்கிற கலைஞர் உதவியுள்ளார்