தேசிய பாதுகாப்பு தொடர்பான அறிவை மட்டுப்படுத்த முடியாது : ஜனாதிபதி!!

465

wpid-wp-1416576647396ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்கின்றபோது நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய அறிவை மட்டுப்படுத்த முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இரத்மலானையிலுள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு கல்விப்பீட கட்டிடத் தொகுதியை நேற்று (04) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

உலகில் நடைமுறையிலுள்ள சர்வதேச உடன்படிக்கைகள், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் சர்வதேச நாணயநிதியம் ஆகியவற்றுடன் செயற்படுகின்றபோது அறிவு அவசியமான ஒரு அம்சம் எனத் தெரிவித்த ஜனாதிபதி, பலம்மிக்க நாடுகளின் ஆதிக்கக் கருத்துக்கள், அழுத்தங்கள் மற்றும் திட்டங்களுடன் செயற்பட வேண்டிய முறைதொடர்பிலும் கவனத்திற்கொள்ளும்போது கொத்தலாவலை பாதுகாப்புப் பல்லைக்கழகம் போன்ற நிறுவனங்களின் பெறுமதியைக் குறைத்து மதிப்பிட முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.