சிறு­மியின் தலையைத் துளைத்த துப்­பாக்கி ரவை!!

505

687474703a2f2f73332e616d617a6f6e6177732e636f6d2f72617067656e6975732f736c6f772b6d6f74696f6e2b636170747572652b62756c6c65742b6c656176696e672b67756e2b7265766f6c7665722b68642b77616c6c70617065722e6a7067திரு­மண கொண்­டாட்­ட­மொன்றின் போது வேடிக்­கைக்­காக தீர்க்­கப்­பட்ட துப்­பாக்கி ரவை­யொன்று, அங்­கி­ருந்து இரு மைல் தொலைவில் விளை­யாடிக் கொண்­டி­ருந்த சிறு­மியின் தலையில் பாய்ந்த சம்­பவம் ஓமானில் இடம்­பெற்­றுள்­ளது.

சவூதி அரே­பி­யாவைச் சேர்ந்த ஸெய்னப் என சுருக்கப் பெயரால் அழைக்­கப்­படும் மேற்படி சிறுமி, வட ஓமானில் முஸன்டம் எனும் இடத்­தி­லுள்ள ஹோட்­ட­லுக்கு வெளியில் தனது சகோ­த­ர­னுடன் விளை­யாடிக் கொண்­டி­ருந்த வேளை­யி­லேயே இந்த அனர்த்தம் இடம்­பெற்­றுள்­ளது.

இந்­நி­லையில் துப்­பாக்கி ரவை பாய்ந்த நிலையில் மருத்­து­வ­ம­னைக்கு உட­ன­டி­யாக கொண்டு செல்­லப்­பட்ட ஸெய்­னப்­பிற்கு அவ­சர சத்­தி­ர­சி­கிச்­சையை மேற்­கொண்ட மருத்­து­வர்கள், அவ­ரது இடது கண்­ணுக்குப் பின்­பு­ற­மாக ஊடு­ரு­வி­யி­ருந்த துப்­பாக்கி ரவையை பெரும் சிர­மத்தின் மத்­தியில் அகற்­றி­யுள்­ளனர்.

மத்­திய கிழக்கு நாடு­களில் திரு­ம­ணங்கள் போன்ற வைபவங்களின் போது துப்­பாக்கி ரவைகள் தீர்க்­கப்­ப­டு­வது வழ­மை­யாகும்.கடந்த வருடம் மேற்படி சம்பவத்தையொத்த அனர்த்தங்களில் சிக்கி இரு ஓமானிய பிரஜைகள் உயிரிழந்திருந்தனர்.