ஊக்கமருந்து பயன்படுத்தி இருந்தால் நடவடிக்கை : சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் எச்சரிக்கை!!

399

doping2001-ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரையில் நடை­பெற்ற ஒலிம்பிக் மற்றும் உலக தட­கள போட்­டி­களில் பதக்கம் வென்ற நீண்ட தூர ஓட்­டப்­பந்­தய வீர ­வீ­ராங்­க­னை­களின் ரத்த

மாதிரி பரி­சோ­தனை முடி­வு­களில் பல­ரது முடி­வுகள் சந்­தேகம் அளிப்ப­தா­கவும், அசா­தா­ர­ண­மா­ன­தா­கவும் இருந்­தது’ என்று ஜேர்­ம­னியைச் சேர்ந்த ஒரு தொலைக்­காட்­சி­யிலும், இங்­கி­லாந்தில் இருந்து வெளி­யாகும் ஒரு பத்­தி­ரி­கை­யிலும் செய்தி வெளி­யாகி உள்­ளது.

சர்­வ­தேச தட­கள சம்­மே­ளன புள்ளி விவ­ரங்­களில் இருந்து இது தெரிய வந்து இருப்­ப­தா­கவும் அதில் கூறப்­பட்­டுள்­ளது.இந்த விவ­காரம் குறித்து சர்­வ­தேச ஒலிம்பிக் கவுன் சில் தலைவர் தாமஸ் பாச் கருத்து தெரி­வித்­துள்ளார்.

அவர் கூறி­ய­தா­வது,



ஒலிம்பிக் போட்­டியில் பதக்கம் வென்ற வீரர்-­ வீராங்­க­னைகள் யாரா­வது ஊக்க மருந்து பயன்­ப­டுத்­தி­யது விசா­ர­ணையில் தெரி­ய­வந்தால் அவர்கள் மீது நட­வ­டிக்கை எடுக்க சர்­வ­தேச ஒலிம்பிக் கவுன் சில் தயாராக இருக்கிறது. இந்த விடயத்தில் நாங்கள் எந்தவித சமரசத் துக்கும் இடம் கொடுக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.