நயன்தாராவுடன் இணைந்து நடிக்க ஆசை: திரிஷா!!

408

nayantrash345

திரிஷா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘சகலகலா வல்லவன்’. இதில் ஜெயம் ரவி, அஞ்சலி, சூரி, விவேக், பிரபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சுராஜ் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் திரிஷா, அஞ்சலியுடன் இணைந்து நடித்திருக்கிறார். இது போல் எந்த நடிகையுடன் இணைந்து நடிக்க ஆசை என்று திரிஷாவிடம் கேட்டதற்கு, நயன்தாராவுடன் இணைந்து நடிக்க ஆசை என்று கூறியிருக்கிறார்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘நயன்தாரா என்னுடைய நெருங்கிய தோழி. அவருடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஏற்கனவே, என்னையும் நயன்தாராவைவும் வைத்து பெண்களை மையப்படுத்தும் கதையம்சம் கொண்ட ஒரு படத்தை இயக்க வெங்கட் பிரபு முயற்சி செய்தார்’ என்றார்.