பல் சொத்தையை ஆரம்பத்திலேயே கவனியுங்கள்!!

497

tooth_decay_serious_disease_deamonte_driver

பல் கூச்சம், பல் சொத்தையை ஆரம்பத்தில் கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால், பல்வேறு பாதிப்புகள் வரும்.சரியாக பல் துலக்காதது முக்கிய காரணம். இனிப்பு வகைகள் அதிகம் சாப்பிடுதல்,இரவு சாப்பிட்ட பின் பல் துலக்காமை,பால் கொடுத்த பின் வாயை சுத்தம்செய்யாமல் குழந்தைகளை துாங்க வைத்தல் போன்றவற்றால் கிருமிகள் (ஸ்ரெப்டோ காகஸ் மியூட்டன்ஸ்) வாயின் பல் குழிக்குள் சென்று தாக்குவதால் பல் சொத்தை ஏற்படுகிறது.

சாதாரணமாக என்றால் கரும்புள்ளி தெரியும். பல்லில் சிறு ஓட்டை விழும்.ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் பல் சொத்தை பாதிப்பு ஆழமாகி வேரையும் பாதிக்கும்.பல் வலி ஏற்படும்.நாளடைவில் பல்லை அகற்றும் நிலை உருவாகும். மேலோட்டமாக, எனாமல் பாதிப்பு இருந்தால் பாதிப்பு பகுதியை சுத்தம் செய்துவிட்டு நிரந்தரமாக பல் ஓட்டையை அடைக்கலாம்.

ஆழமாக ஓட்டை இருந்தால் தற்காலிக அடைப்பு என்ற முறையில் ‘Zoe’ எனப்படும், சிமென்ட்டால் அடைப்பதால், மேலும் பரவாமல் தடுக்க முடியும்.ஆரம்ப நிலையிலேயே பல் வைத்தியரின் ஆலோசனை பெற்றால் மற்ற பாதிப்புக்களை தடுக்கலாம்.