வவுனியா மன்னார் பிரதானவீதியில் மக்கள் கூட்டம் நிறைந்த பட்டானிச்சியூர் புளியங்குளம் பகுதியில் இன்று மாலை 7.00 மணியளவில் டிப்பர் வாகனம் ஒன்று தனது கொள்கலன் பகுதியை உயர்த்திய படி வந்து அங்குள்ள மின்சார வயர்களை அறுத்தமையினால் சிறிது நேரம் பதட்டம் நிலவியது .
மேற்படி சம்பவமானது டிப்பர் வாகனத்தின் சாரதியின் கவனக்குறைவினால் ஏற்பட்டதாக அங்கு குழுமியிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர் . மேற்படி பிரதேசத்தில் இரண்டு அரசியல் கட்சிகளின் பிரதான காரியாலயங்கள் அமைந்துள்ள படியால் அங்கு பெருமளவில் பொதுமக்கள் கூடியிருந்தபோதும் குழுமியிருந்த இளைஞர்கள் உடனடியாக செயல்பட்டதுடன் சம்பவ இடத்துக்கு மின்சார சபையினர் வந்து நிலைமையினை கட்டுபாடுக்குள் கொண்டு வந்த பின்னர் தொடர்ந்தும் தடையற்ற முறையில் போக்குவரத்து இடம்பெறுகிறது .
வவுனியா நெற் செய்திகளுக்காக வித்தகன்