பஸ் மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி. காலி முகத்திடலில் சம்பவம்!!

510

Accident-Logo-Feature-380x240

கொழும்பு, காலி வீதியில் வேகமாக பயணித்த பஸ் ஒன்று மோதியதில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணமடைந்தார். காலி முகத்திடலில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் ஷேங்க்ரில்லா ஹோட்டலுக்கு முன்பாகவே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வேகமாக வந்த குறித்த பஸ் மற்றுமொரு பஸ் வண்டியை முந்த முயன்ற வேளையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.