அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முதன்மை வேட்பாளருமான றிஷாட் பதியுதீன் வவுனியாவில் நேற்று(0708.2015) மக்கள் ஆதரவை திரட்டும் நோக்கில் வவுனியாவின் முஸ்லிம் கிராமங்களான பாவற்குளம், சிப்பிக்குளம், மாங்குளம் ஆண்டியாபுளியங்குளம் சாளம்பைகுளம் மற்றும் சூடுவெந்த புலவு ஆகிய இடங்களுக்கு தனது அணியின் வேட்பாளர்கள் சகிதம் சுற்று பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
அத்தோடு அந்தந்த கிராமங்களில் அமைக்கபட்ட கட்சி காரியாலயங்களை திறந்து வைத்ததுடன் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடினார்.
கிராமங்கள் தோறும் பொதுமக்கள் மாலையிட்டு வெடிகொளுத்தி ஆரவாரமிட்டு மக்கள் அகில இலைங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் வன்னிமாவட்ட அமைப்பாளர் கௌரவ ரிஷாத் பதியுதீன் மற்றும் ஜெயதிலக .எகியான் முதலாலான சிங்கள மற்றும் முஸ்லிம் வேட்பாளர்களை வரவேற்றனர் .நேற்று மாலை மாங்குளம் பகுதியில் ஒரு தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றிலும் கலந்துகொண்டார்.
வவுனியா நெற் செய்திகளுக்காக செட்டிகுளத்திலிருந்து சித்திக்