
தலவாக்கலை ட்ரூப் பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பிரதேச வாசிகள் கொடுத்த முறைப்பாட்டினையடுத்து தலவாக்கலை ட்ரூப் பகுதியை சேர்ந்த சந்தேக நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
லிந்துலை ட்ரூப் பகுதியை சேர்ந்த குறித்த சிறுமியின் அயல் வீட்டிலிருந்த 45 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்துள்ளார்.
அதன் பின் சிறுமி அவமானத்தால் விஷம் அருந்தி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சிறுமியின் தாய் சிறுமியிடம் விசாரிக்கும் போது நடந்த சம்பவத்தை கூறியதன் பின் பிரதேச வாசிகள் ஒன்று சேர்ந்து பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபரை ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபரை இன்று நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.





