
ராமேசுவரத்தில் அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள், மாணவ-மாணவிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அப்துல் கலாமுக்கு பாம்பன் பாலம் அருகில் சிலை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்துல் கலாம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு இன்றுடன் ஒன்பது நாளாகிறது.
தினமும் பொதுமக்க்ள, மாணவ-மாணவிகள் என ஆயிரக்கணக்கானோர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவரது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள கலாமின் சாதனை படக்கண்காட்சியையும் பார்த்து செல்கின்றனர். ராமேசுவரத்தில் ராமநாத சுவாமி கோவிலை அடுத்து தற்போது கலாம் அடக்கம் செய்யப்ட்ட இடத்திற்கே அதிகமானோர் வந்து செல்கின்றனர்.
இதுதவிர ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பாம்பன் பாலம் அருகில் குடியரசு தலைவர் அப்துல் கலாமிற்கு 20 அடி உயரத்தில் பீடத்துடன் கூடிய இரும்புச் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற செப்டம்பர் 26ம் திகதி நடைபெறுகிறது.





