
வட கொரியாவின் உள்ளூர் நேரம் தற்போது உள்ளதைவிட அரை மணி நேரம் குறைக்கப்படுவதாக அந்த நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்தது.
1910 முதல் 1945-ஆம் ஆண்டு வரை கொரியாவை ஆண்ட ஜப்பான் ஆட்சியாளர்கள் கிரீன்விச் நேரத்தைவிட 8.30 மணி நேரம் கூடுதலாக இருந்த கொரிய, நேரத்தை, ஜப்பானைப் போல் 9 மணி நேரம் கூடுதலாக மாற்றியமைத்தனர்.
ஜப்பான் நேரத்தை பின்பற்ற கூடாது என்பதற்காக வட கொரியா தனது நேர அளவை அரை மணி நேரம் பின்னோக்கி அமைக்க முடிவு செய்துள்ளது.
இந்த புதிய நேர அளவு பியோங்யாங் (GMT +8.30 ) என்ற பெயரில் அழைக்கப்படும். ஆனால் தென் கொரியா ஜப்பான் நேரத்தையே பின்பற்ற போவதாக அறிவித்துள்ளது.





