
ஹெரோயின் வைத்திருந்த பெண் ஒருவரை கைதுசெய்ய முற்பட்டவேளை, கிரான்பாஸ் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது நபர் ஒருவர் இடையூறு விளைவித்ததோடு, அவர் நிலத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து மக்கள் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட வேளை பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.





