அதிக நேரம் பிறந்த தினத்தை கொண்டாடி ஜேர்மனிய இளைஞர் வித்தியாசமாக ஒரு சாதனை!!

507

world record

உலகிலேயே மிகவும் அதிக நேரம் தனது பிறந்த தினத்தைக் கொண்டாடிய நபர் என்ற உலக சாதனையை ஜேர்மனியைச் சேர்ந்த செவன் ஹகெமியர் என்ற நபர் படைத்துள்ளார்.

அவர் தனது 26 ஆவது பிறந்ததினத்தை வெவ்வேறு நேர வலயங்களைக் கொண்ட பிராந்தியத்தினூடாக 46 மணி நேரம் விமானத்தில் பறந்து தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

அவர் அவுஸ்திரேலிய பிரிஸ்பேன் நகரிலிருந்து ஹவாயின் ஹொனோலுலு பிராந்தியம் வரை விமானப் பயணத்தை மேற்கொண்டதன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார்.

அவரது சாதனையை உலக சாதனையாக அங்கீகரித்து கின்னஸ் உலக சாதனைப் பதிவேட்டு அதிகாரிகள் சான்றிதழை வழங்கியுள்ளனர்.

அவர் ஏற்கனவே 35 மணித்தியாலங்கள் 25 நிமிட நேரம் பயணத்தை மேற்கொண்டு மேற்கொண்டு பாகிஸ்தானிய கராச்சி நகரைச் சேர்ந்த நர்கிஸ் பிம்ஜி என்பவரால் நிறைவேற்றப்பட்ட உலக சாதனையை முறியடித்துள்ளார்.