வவுனியாவில் சிறுவர் துஸ்பிரயோகம் குறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரம்!!(படங்கள்)

1233

வவுனியா மீள்குடியேற்ற கிராமமான ஈஸ்வரிபுரத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் சம்பந்தமானவழிப்புணர்வுப் பிரச்சாரம் ஒன்று நேற்று (08.08.2015) மாலை 4.00 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது.

இந் நிகழ்வானது சமூக விழிப்புணர்ச்சிக்கான மக்கள் அமைப்பின் வவுனியா மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வி எஸ்.வதனி அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இன் நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த அவர்..

அண்மைக் காலத்தில் எமது நாட்டில் சிறுவர்களுக்குஎதிரான துஸ்பிரயோகங்கள் அதிகமாகக் காணப்படுகின்றது எனத் தெரிவித்ததுடன் எங்கள் கிராமத்தில் சிறுவர்களை துஸ்பிரயோகத்தில் இருந்து பாதுகாப்பதற்காகவும் சிறுவர்களுக்கு அவர்களுடைய உரிமைகள் தொடர்பான விளக்கமளிப்பதற்காகவே இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது எனக் குறிப்பிட்டார்.

ஈஸ்வரிபுரம் கிராமத்தில் மாத்திரமல்லாது மற்றைய கிராமங்களிலும் சிறுவர்களுக்கு அவர்களின் உரிமைகள் தொடர்பான வழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இன் நிகழ்வில் 40க்கும் அதிகமான ஈஸ்வரிபுரம் கிராமத்துச் சிறுவர்கள் கலந்துகொண்டதுடன் அவர்களுக்கு சிறுவர் உரிமை தொடர்பான மேலதிக விளக்கங்கள் வழங்கப்பட்டது.

-பிராந்திய செய்தியாளர்-

01 02 03 05