
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமாரின் வீடு உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ளது.
இவரது தந்தை கிரண்பால் சிங், புலன்ட்ஷர் மாவட்டத்தில் ரன்வீர்சிங் என்பவரிடம் ரூ.80 இலட்சத்திற்கு நிலம் வாங்க, பேரம் பேசினார். இதற்கான தொகையை ‘நெட்பேங்கிங்’ மூலம் வழங்கியுள்ளார்.
ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட ரன்வீர்சிங் இதுவரை நிலத்தை அவரது பெயருக்கு எழுதிக்கொடுக்கவில்லை. இதையடுத்து பணத்தை திருப்பி கேட்ட போது அதையும் திருப்பி கொடுக்க மறுத்திருக்கிறார். ரன்வீர்சிங் கொலை வழக்கில் சிக்கி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து பணத்தை திருப்பி கேட்டதால் ரன்வீர்சிங் தனது அடியாட்கள் மூலம் கிரண்பால் சிங்குக்கும், புவனேஷ்வர்குமாருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிரண்பால் சிங் இது குறித்து பொலிசில் புகார் செய்தார். ரன்வீர்சிங் மற்றும் அவரது உதவியாளர்கள் 5 பேர் மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.





