சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகவிருக்கும் புதிய படத்தில் அவருக்கு மகளாக நடிக்க நடிகை தன்ஷிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.
இவருடன் பிரகாஷ்ராஜ், நாசர், ராதிகா ஆப்தே, மெட்ராஸ் கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்கள்.
இந்நிலையில் படத்தில் முக்கிய வேடமாக வரும் ரஜினியின் மகள் வேடத்துக்கு முதலில் லட்சுமி மேனனிடம் பேசலாமா என்று யோசித்த போது வேண்டாம் என்று கூறிவிட்டார் இயக்குநர்.
அதனையடுத்து ரஜினியின் நிறத்தில் இருக்கவேண்டும் என்றும், அவரைப் போலவே உயரமாகவும் இருக்கவேண்டும் என்று கருதியதால் நடிகை தன்ஷிகா தெரிவு செய்யப்பட்டு, ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதை கேட்டதும் தன்ஷிகா சந்தோஷப்பட்டுக் கொண்டே மலேசியாவிற்கு பறக்கும் நாளை எண்ணியெண்ணி மகிழ்ச்சியுடன் இருக்கிறாராம்.
தன்ஷிகா ஏன்கனவே பேராண்மை, அரவான் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





