வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் தேர்தல் காண்கானிப்பாளர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு இன்று (11.08.2015) காலை 10.00 மணியளவில் வவுனியா நெல்லி ஸ்ரார் ஹோட்டலில் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தலைமையில் இடம்பெற்றது.
இச் செயலமர்வில் கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் அகமட் மனாஸ், கபே அமைப்பின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் மனோராஜ் ராஜ்குமார், கபே அமைப்பின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் விஜயகுமார் மற்றும் வன்னி மாவட்ட தேர்தல் காண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
செயலமர்வின் போது கண்காணிப்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாக தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் வன்னி மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான செயலமர்வு நடைபெற்றது.
-பிராந்திய செய்தியாளர்-






