வவுனியாவில் கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!

608

arrests

வவுனியா பூவரசங்குளம வேலன்குளம் பகுதியில் வேட்டைக்குப் பயன்படுத்தும் கட்டுத் துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்ற ஒருவரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா பூவரசங்குளம் வேலன்குளம் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் செல்வேந்தன் (கிளி) 60வயது என்பவர் பல காலமாக மிருகங்களை வேட்டையாடி வந்துள்ளார். அதற்கு கட்டுத் துப்பாக்கியினைப் பயன்படுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிசாரிற்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து நேற்று (11.08.2015) மாலை வேட்டைக்காகச் சென்றவரை பின் தொடர்ந்து அவர்வசமிருந்த துப்பாக்கியுடன் கைது செய்து வவுனியா பொலிசாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

-பிராந்திய செய்தியாளர்-