வவுனியாவில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் மாபெரும் பொதுக்கூட்டம்!!(படங்கள், காணொளி)

537

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இன் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் வவுனியா கலைமகள் விளையாட்டரங்கில் இன்று (12.08.2015) மாலை 5.30 மணிக்கு அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் சி.கஜேந்திரகுமார் (முதன்மை வேட்பாளர்), வி.இந்திராணி (சமூக செயற்பாட்டாளர் முல்லைத்தீவு), க.பார்த்திபன் ( சட்டத்துறை மாணவன் ஒட்டுசுட்டான்), செ.பாலசுப்பிரமணியம் (மல்லாவி), இ.பிரபாகரன் (புதுக்குடியிருப்பு), பற்றிஸ் ஜனன் (புனர்வாழ்வு சிகிச்சையாளர் மன்னார்) ரா.சிவரதி (ஆசிரியை வவுனியா), எஸ்.என்.ஜி.நாதன் ( சமாதன நீதவான் வவுனியா), இ வி.விக்னேஸ்வரா ( தலைமன்னார்), வன்னிமாவட்ட தேர்தல் தொகுதிக்கான அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கடந்த யுத்தகாலத்தின் போது உயிர்நீத்த போராளிகள் மற்றும் பொதுமக்களுக்காக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களினால் ஈகைச்சுடரேற்றி அக வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து வன்னி மாவட்ட வேட்பாளர்களின் அறிமுக உரையும் இடம்பெற்றது.

-பிராந்திய செய்தியாளர்-

20150812_173017 20150812_173025 20150812_180145 20150812_180232 20150812_180241 20150812_180338 20150812_180352 20150812_180358 20150812_180438 20150812_181117 20150812_181121 20150812_181136 20150812_181205 20150812_181209 20150812_181255 20150812_181322 20150812_181334 20150812_181339 30150812_173008