
சீனாவின் வட மேற்கு ஷாங்ஸி மாகாணத்தில் புதன்கிழமை இடம்பெற்ற பாரிய மண்சரிவொன்றையடுத்து 40 பேர் காணாமல்போயுள்ளனர்.
இந்த மண்சரிவில் ஷாங்யங் நகரிலுள்ள ஷாங்ஸி வுஸொயு சுரங்கக் கம்பனிக்குச் சொந்தமான விடுதிகளும் வீடுகளும் புதையுண்டுள்ளன.
மேற்படி மண்சரிவில் புதையுண்ட 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தென் சீனாவை கடந்த வார இறுதியில் தாக்கிய சூறாவளியொன்று காரணமாக அந்நாட்டின் பல பிரதேசங்களில் அடை மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





