நண்பரை திருமணம் செய்யும் ப்ரியாமணி!!

468

Wedding-bells-for-Priyamaniபருத்திவீரன், மலைக்கோட்டை ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ப்ரியா மணி. பாரதிராஜா, மணிரத்னம், அமீர் என பெரிய இயக்குனர்கள் படத்தில் நடித்தாலும் தற்போது மார்க்கெட் இல்லாமல் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக தான் இருந்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் மும்பையை சார்ந்த ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தை நடத்தி வரும் முஸ்தபா ராஜ் என்கிற அவரது நண்பரையே திருமணம் செய்யவிருக்கின்றாராம்.

இது குறித்து அவர் கூறுகையில் ’என்னுடைய இன்பம், துன்பம் என அனைத்திலும் என்னுடன் இருந்தவர் அவர், அதனால் தான் என்னுடைய வாழ்க்கை துணையாக அவரை தேர்ந்தெடுத்தேன்’ என கூறியுள்ளார்.