வவுனியா மன்னார் வீதி விபத்தில் இருவர் படுகாயம்!!(படங்கள்)

660

வவுனியா மன்னார் வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த கார் இன்று 13.08.2015 காலை 7 மணியளவில் வீதி ஓரத்தில் நின்றவர் மீது மோதியதில் வவுனியா தாலிக்குளம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மேரி (65வயது) மற்றும் காரில் பயணித்த முகமட் மாகீர் (29) குருநாகலைச் சேர்ந்தவருமே படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரில் வந்தவர்கள் தூக்கம் இன்மை காரணமாகவே இவ் விபத்து இடம்பெற்றிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

மேலதிக விசாரணையினை வவுனியா போக்குவரத்துப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-பிராந்திய செய்தியாளர்-

IMG_1854 vaa