மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம் “அன்னயும் ரசூலும்”. இந்தப் படத்தில் இயக்குநர் பாசில் மகன் பர்கத் பாசிலும், ஆண்ட்ரியாவும் ஜோடியாக நடித்திருந்தனர்.
இதையடுத்து ஆண்ட்ரியாவைக் காதலிப்பதாக சமீபத்தில் பர்கத் பாசில் கூறியிருந்தார். அவருடைய இந்த அறிவிப்பு தமிழ் மற்றும் மலையாளப் பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் பர்கத்தின் காதலை ஆண்ட்ரியா நிராகரித்து விட்டார். பர்கத்தை நண்பனாக மட்டுமே நினைத்து பழகினேன் என ஆண்ட்ரியா தெரிவித்தார்.தற்போது இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்யப் போகின்றனர்.
படத்தை உதயநிதி ஸ்டாலினின் “ரெட் ஜெயண்ட் மூவிஸ்” நிறுவனம் வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
தமிழிலும் ஆண்ட்ரியாவே ஹீரோயினாக நடிப்பார் என தயாரிப்பாளர் வினோத் விஜயன் தெரிவித்து உள்ளார்.





