உலகக் கிண்ண வலைப்பந்தாட்டம் 2015 தரப்படுத்தலுக்கான லீக் சுற்றிலும் இலங்கை ஏமாற்றம்!!

620

world-cup-netball1உலகக் கிண்ண வலைப்­பந்­தாட்டப் போட்­டி­களில் மீண்டும் தனது ஆற்­றலை வெளிப்­ப­டுத்தத் தவ­றிய இலங்கை, நேற்று நடை­பெற்ற பார்­ப­டொ­ஸு­ட­னான குழு ‘எச்’ தகு­திகாண் சுற்றின் கடைசி லீக் போட்­டியில் படு­தோல்வி அடைந்­தது.

இப் போட்­டியில் பார்­படொஸ் 67–33 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் அமோக வெற்­றி­பெற்­றது. இதில் கோல் போடு­வ­தற்கு கிடைக்­கப்­பெற்ற 49 வாய்ப்­பு­களில் 16 வாய்ப்­புகள் தவறவிட்டது இலங்கை அணி.

போட்­டியின் முத­லா­வது கால் பகு­தியில் ஒரு கட்­டத்தில் 5 –4 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் இலங்கை முன்­னி­லையில் இருந்­தது. ஆனால் அதன் பின்னர் இலங்கை வீராங்­க­னைகள் இழைத்த தவ­று­களின் கார­ண­மாக பார்­படொஸ் 18 –12 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் முன்­னிலை பெற்­றது.

இப் பகு­தியில் பார்­படொஸ் 19 கோல்­களைப் போட்­ட­துடன் இலங்­கை­யினால் 5 கோல்­க­ளையே போட முடிந்­தது. மூன்­றா­வது கால் பகு­தி­யிலும் பார்­ப­டொஸின் திற­மைக்கு ஈடு­கொ­டுப்­பதில் தடு­மா­றிய இலங்கை அப் பகு­தி­யிலும் 8 க்கு 17 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் பின்­னி­லையில் இருந்­தது.

கடைசி கால் பகு­தியில் இரண்டு அணி­யி­னரும் ஓர­ளவு சம­மாக விளை­யா­டி­யதை அவ­தா­னிக்க முடிந்­தது. எனினும் பார்­படொஸ் 13 க்கு 8 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் முன்­னிலை வகித்து ஒட்­டு­மொத்த நிலையில் 67 க்கு 33 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் இல­கு­வாக வெற்­றி­பெற்­றது. அணித் தலைவி செமினி ஏகப்­பட்ட தவ­று­களை இழைத்­த­போ­திலும் அவ­ரது தாயாரும் பயிற்­று­ந­ரு­மான தீப்தி அல்விஸ் அவரை மாற்­று­வ­தற்கு முயற்­சிக்­க­வில்லை. எனினும் போட்டி முடி­வ­டைய 4 நிமி­டங்கள் இருந்­த­போது அவர் உபா­தைக்­குள்­ளாகி அரங்­கி­லி­ருந்து மருத்­துவ உதவிக் குழு­வி­னரால் தூக்கிச் செல்­லப்­பட்­ட­போதே அவ­ருக்குப் பதி­லாக வேறொ­ருவர் கள­மி­றக்­கப்­பட்டார்.

இலங்கை சார்­பாக ஹசித்தா மெண்டிஸ் 26 முயற்­சி­களில் 17 கோல்­க­ளையும் திசலா அல்­கம 19 முயற்­சி­களில் 13 கோல்­க­ளையும் போட்­டனர். உலகக் கிண்ண வலை­ப்பந்­தாட்டப் போட்­டி­களில் விளை­யா­டு­வோரில் மிகவும்

இளையவரான 17 வயதுடைய ஸெனிக்கா தோமஸ் 22 முயற்சிகளில் 15 கோல்களைப் போட்டமை விசேட அம்சமாகும். இலங்கையின் சகல போட்டிகளும் நேற்றுடன் நிறைவுபெற்றுள்ள நிலையில் கடைநிலை தரப்படுத்தலுக்கான இறுதிச் சுற்றில் இலங்கை நாளை விளையாடவுள்ளது.