காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 375 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் தவான், கோஹ்லியின் சதத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 192 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
முதலில் விளையாடிய இலங்கை அணிஇ அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின், 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் 7 ஓட்டங்களுடனும் ரோகித் சர்மா 9 ஓட்டங்களுடனும் வீழ்ந்தனர். பின்னர் மற்றொரு தொடக்க வீரர் தவானும் அணித் தலைவர் கோஹ்லியும் இணைந்து அணியை நிமிர வைத்தனர்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து, 128 ஓட்டங்களை எடுத்திருந்தது. நேற்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. தவான்இ நேற்றைய போட்டியில் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இது இவருக்கு 4ஆவது சதமாகும். பின்னர் இந்திய அணித் தலைவர் கோஹ்லியும் சதம் பெற்றார். கோஹ்லி 103 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ரஹானே டக் அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து சஹா களம் கண்டார். மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த தவான் 134 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பிறகு இந்திய அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து சரியத் தொடங்கின.
இறுதியில் இந்திய அணி 375 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து. இதில் இலங்கை அணியின் பந்துவீச்சாளர் தரிந்து கௌஷால் அபாரப் பந்துவீச்சை வெளிப்படுத்தி 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
தனது 2ஆவது இன்னிங் ஸை ஆரம்பிக்க களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான கருணாரத்ன மற்றும் சில்வா ஆகிய இருவரும் ஓட்டமேதும் பெறாத
நிலையில் வெளியேறினர்.
அதன் பிறகு களம் கண்டார் சங்கா. அவருக்கு ஜோடியாக மறுமுனையில் ஆடுகிறார் பிரசாத். நேற்றைய ஆட்ட நேர முடிவின்போது இவ்விருவரும் களத்தில் நின்று 5 ஓட்டங்
களைப் பெற்றுக் கொண் டனர்.
இலங்கை அணியை விட 187 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்தியா. இன்று 3ஆவது நாள் ஆட்டம்.





