
இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பான் ராணுவம் நடத்திய அத்துமீறல்களுக்காக அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே நேற்று பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற 70ஆம் ஆண்டு நிறைவையொட்டி, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
போர் முடிந்ததில் இருந்து இந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் வளத்துக்கு எங்களை நாங்களே அர்ப்பணித்து வருகிறோம். போரில் பலியானோருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
முந்தைய அரசுகளும் அமைச்சரவைகளும் தெரிவித்துள்ள ஆழ்ந்த வருத்தம் என்பது அசைக்க முடியாத வலிமை கொண்டது.
ஆனால், இரண்டாம் உலகப் போருக்காக இனி அடுத்த தலைமுறை மன்னிப்பு கேட்கத் தேவையில்லை என்று பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்தார்.
அந்தப் போருக்குத் துளியும் சம்பந்தமில்லாத எதிர்கால சந்ததிகள் தொடர்ந்து மன்னிப்புக் கேட்க வேண்டியதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.





