தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி!!

548

Web-temppppr2015 பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 75 ஆயிரம் பொலிஸார்; கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் வாக்காளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் அச்சமின்றி தங்களின் வாக்குகளை நேரத்துடன் வழங்குமாறும் தெரிவித்ததார்.

மேலும் இன்று வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகள் என்பன கொண்டும் செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது