அனைத்து ஊழியர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை!!

504

2061458862Untitled-1எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ள அனைத்து அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என, தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் மூலம் குறித்த விடுமுறை வழங்கப்படும் நடைமுறைகள் பற்றி வௌியிடப்பட்டுள்ளதாக, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

இதன்படி தூரத்தை அடிப்படையாகக் கொண்டு, அதிகபட்சமாக இரண்டு நாட்கள் வரையான விடுமுறை வாக்காளர்களுக்கு கிட்டும் என, அவர் கூறியுள்ளார்.