தேசியக் கொடியை தழைகீழாக ஏற்றிய மந்திரி!!

496

India-flag-flying-highபஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் அமைந்துள்ள குருநானக் அரங்கத்தில் இந்திய சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மாநில அரசு சார்பில் நடந்த இந்த விழாவில் மந்திரி பிக்ராம் சிங் மஜிதியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். அப்போது தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டு இருந்தது.

இந்த விழாவில் அமிர்தசரஸ் பொலிஸ் கமிஷனர் அலாக், துணை கமிஷனர் ரவி பகத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட போதும், தேசியக்கொடி தலைகீழாக பறந்ததை முதலில் யாரும் கவனிக்கவில்லை.

பின்னர் சுமார் 1 மணி நேரத்துக்குப்பின், இந்த தவறை அதிகாரிகள் கண்டுபிடித்து சரி செய்தனர். அரசு விழாவில் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்ட சம்பவம் அமிர்தசரசில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மந்திரி பிக்ராம் சிங் உத்தரவிட்டார். அதன்படி தவறுக்கு காரணமானவர்கள் என கருதப்படும் இரண்டு பொலிசாரை மாவட்ட நிர்வாகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும் நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.