
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக திரையுலகில் நாயகியாகத் திகழும் த்ரிஷா, முதல் முறையாக ஒரு மலையாளப் படத்தில் நடிக்கிறார்.
இதில் அவருடன் நடிக்கப் போகிறவர் மலையாளத்தின் முன்னணி நடிகர் மம்முட்டி.
தமிழ், தெலுங்கு, இந்தி, கடைசியாக கன்னடம் போன்ற மொழிகளில் நடித்த த்ரிஷா மலையாளத்தில் மட்டும் நடிக்காமல் இருந்தார்.
எத்தனையோ அழைப்புகள் வந்தும் அவர் அவற்றைத் தவிர்த்துவிட்டார். அறிமுகப்படுத்திய ப்ரியதர்ஷனே மலையாள இயக்குநர்தான் என்றாலும், அங்கு சம்பளம் குறைவு, வணிகப் பரப்பும் குறைவு என்பதால் அவர் மலையாளத்தில் அக்கறை காட்டவில்லை.
இந்த நிலையில் இப்போது முதல் முதலாக மலையாளப் படத்தில் நடிக்கிறார், அதுவும் மம்முட்டிக்கு ஜோடியாக! ஒயிட் என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்தப் படத்தை உதய் ஆனந்த் இயக்குகிறார்.
பிற விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.





