வன்னியில் மற்றுமொரு அகில இலங்கை தமிழர் மகாசபை உறுப்பினர் த.தே.கூட்டமைப்புக்கு ஆதரவு!!

782

வன்னித் தேர்தல் தொகுதியில் அகில இலங்கை தமிழர் மகாசபையின் சார்பில் கப்பல் சின்னத்தில் இலக்கம் 1 இல் வேட்பாளராக போட்டியிடும் இன்பரத்தினம் சுதாகரன், நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகி,

தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்றுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும், தமிழ் தேசியக்கூட்டமைப்பில் ‘வீட்டுச்சின்னத்தில் இலக்கம் 2 இல்’ போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் அவர்களுக்கும் ஆதரவை வழங்குவதாக 14.08.2015 அன்று அறிவித்திருந்தநிலையில்…

அக்கட்சியின் மற்றுமொரு வேட்பாளரான இலக்கம் 3 இல் போட்டியிடும் தியாகராசா குணதீபனும், 17.08.2015 அன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகி,
தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்றுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும், தமிழ் தேசியக்கூட்டமைப்பில் ‘வீட்டுச்சின்னத்தில் இலக்கம் 2 இல்’ போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் அவர்களுக்கும் ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்படாமல் காக்கப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக்கொண்டே தான் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொள்வதாக கூறுகின்ற தியாகராசா குணதீபன் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் தமது பலத்தை நிரூபிப்பதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு ஆதரவை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது முடிவு தொடர்பில்:

‘வன்னி வாழ் வாக்காளர் பெருமக்களுக்கு: அறியத்தருவது யாதெனில்,’ என்று தலைப்பிட்டு, வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தனின் அலுவலகத்தில் வைத்து, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் (ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்) வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் பரமேஸ்வரனிடம் (மோசஸ்பாபு) 15.08.2015 அன்று கையளிக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பாராளுமன்றத்தேர்தல் – 2015

தியாகராசா குணதீபன்,
(தே.அ.அ.இல: 882661180V)
வேட்பாளர்,
அகில இலங்கை தமிழர் மகாசபை.

வன்னி வாழ் வாக்காளர் பெருமக்களுக்கு: அறியத்தருவது யாதெனில்,

வன்னி தேர்தல் தொகுதியில் அகில இலங்கை தமிழர் மகாசபையின் (அரசியல் கட்சி) சார்பில், கப்பல் சின்னத்தில் இலக்கம் 3 இல் வேட்பாளராக போட்டியிடும் தியாகராசா குணதீபன் (தே.அ.அ.இல: 882661180V) ஆகிய நான், தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்படாமல் காக்கப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக்கொண்டு, தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகி, தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்றுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும்,

தமிழ் தேசியக்கூட்டமைப்பில் (இலங்கை தமிழரசுக்கட்சி – வீட்டுச்சின்னம்) இலக்கம் 2 இல் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் அவர்களுக்கும் ஆதரவை வழங்குவது என்ற தீர்மானத்தை எடுத்துள்ளேன் என்பதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

எனவே நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ் மக்கள் ஆகிய நாம், எமது பலத்தை நிரூபிப்பதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

தியாகராசா குணதீபன்
15.08.2015

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1 2 3 4