நேபாளத்திற்குள் நுழைய முற்பட்ட ஐந்து இலங்கையர்கள் கைது!!

432

handcuffsசட்டவிரோதமாக நேபாளத்திற்குள் நுழைய முற்பட்ட ஐந்து இலங்கையர்கள் இந்திய – நேபாள எல்லையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். எல்லையில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய அதிகாரிகளாலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கையர்கள் தவிர்த்து பங்களாதேஷ், பூட்டான் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இதன்போது கைதாகியுள்ளனர். இவர்கள் இந்தியப் பிரஜைகள் எனக் கூறியே நேபாளத்திற்குள் நுழைய முற்பட்டுள்ளதாக தெரிகின்றது.