முறிகண்டிப் பிள்ளையாரைப் புரட்டிய இலங்கை மின்சாரசபை வாகனம்!!

981

muri

அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை மின்சாரசபைக்கு சொந்தமான வாகனம் பழைய முறிகண்டி பகுதியில் நேற்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்தார்.

வீதியின் அருகில் இருந்த பழைய முறிகண்டி பிள்ளையார் கோயிலும் முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும்
தெரியவருவதாவது,

ஏ-9 வீதியில் வேகமாக வந்த கனரக வாகனம் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டுவிலகி அருகில் இருந்த கோயிலை இடித்து தள்ளியுள்ளது. இதனால் கோயில் முற்றாகச் சேதமடைந்துள்ளது.



இதன்போது வாகனத்தின் உதவியாளர் காயமடைந்து கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

muri1

muri3 muri2